பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெறயிருக்கும் தமிழக அரசின் நான்கான்டு சாதனைகளை விளக்கும் மக்கள் சந்திப்பு பயணத்திற்கு, கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டுமென அதிமுக வின் மாவட்ட கழக செயலாளர் ஆர்.டி.ராமச்சந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.

அஇஅதிமுக வின் பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளர் ஆர்.டி.ராமச்சந்திரன் தெரிவித்துள்ள அறிக்கையில்,தமிழகத்தின் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு பள்ளிமாணவர்கள்,விவசாயிகள், தொழில் நிறுவனங்கள்,சிறு குறு தொழில் முனைவர்கள்,கர்பிணிப்பெண்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் பயன்பெரும் வகையில்,பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருவதாகவும்,மேலும் தமிழக முதல்வர் தொலைநோக்கு பார்வையோடு எண்ணற்ற திட்டங்களை ஆற்றிவரும் நிலையில்,கடந்த நான்கான்டு சாதனைகளை விளக்கும் வகையில் மக்கள் சந்திப்பு பயணம் நிகழ்ச்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரம்பலூர்மருதராஜா,சிதம்பரம் சந்திரகாசி,பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்செல்வன் ஆகியோர்கள் முன்னிலையிலும்,சிறப்பு அழைப்பாளராக. தலைமை கழக பேச்சாளர் நெத்தியடி நாகையன் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி நாளை (31.10.15)சனிக்கிழமை காலை 10-மணிக்கு பெரம்பலூர் நகராட்சிப்பகுதியில் புதியபேருந்து நிலையத்திலுள்ள எம்.ஜி.ஆர் சிலை முன்பு நிகழ்ச்சிகள்தொடங்கப்பட்டு, பெரம்பலூர் ஒன்றியத்தின் 11-மணிக்கு எளம்பலூரிலும்,12-மணிக்கு வேப்பந்தட்டை ஒன்றியம் வாலிகண்டாபுரத்திலும்,லப்பைக்குடிகாடு பேரூர் கழகத்தின் சார்பில் மதியம் 1-மணிக்கும்,மாலை 3-மணிக்கு வேப்பூர் ஒன்றியத்தின் குன்னத்திலும் அதனைத்தொடர்ந்து மாலை 4-மணிக்கு ஆலத்தூர் ஒன்றியம் மருதையான் கோவிலும்,நிறைவாக மாலை 5.30-மணிக்கு செந்துறை ஒன்றியம் செந்துறையிலும் நான்கான்டு சாதனைகளை விளக்கும் மக்கள் சந்திப்பு பயண நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாகவும்,எனவே கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் மக்கள் சந்திப்பு பயண நிகழ்ச்சியில் திரளாக கலந்து கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!