பெரம்பலூரில், தேமுதிகவினர் தமிழக அரசு மதுக் கடைகளை மூட வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.
பெரம்பலூர் : தே.மு. தி. க தலைவர் விஜயகாந்த்தின் ஆணையின்படி தமிழக அரசு மதுபானகடைகள் (டாஸ்மாக்) மூட கோரியும், தமிழக அரசு மதுவிலக்கு சட்டத்தை நடைமுறைப் படுத்த கோரியும் அறவழியில் அமைதியான முறையில் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் துரை.காமராஜ் தலைமையில் மனிதசங்கிலி போராட்டம் பெரம்பலூர் கடைவீதியில் இன்று மாலை நடத்தினர்.
இந்நிகழ்ச்சியில் அவை தலைவர் கணபதி, மவட்ட பொருளாளர் சீனி.வெங்கடேசன், மாவட்ட துணை செயலாளர் ஆர்.கண்ணுசாமி, கங்காதரன், சுடர்செல்வன்,சிவகுமார், வேப்பந்தட்டை ஒன்றிய செயலாளர் துரை.சிவாஐயப்பன், ஆலத்தூர் ஒன்றிய செயலாளர் பொன்சாமி.துரை, வேப்பூர் ஒன்றிய செயலாளர் மலர்மன்னன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
செயற்குழு உறுப்பினர் செல்லப்பிள்ளை, ரெங்கராஜ் பொதுகுழு உறுப்பினர் ரவிக்குமார், விஜயகுமார், கேப்டன் மன்ற செயலாளர் தவசிஅன்பழகன், துணை செயலாளர் விஜயகண்ணன், மாவட்ட இளைஞராணி செயலாளர்கள் இளையராஜா, சஞ்சீவிக்குமார், சதாசிவம், கார்த்திக், மாவட்ட மகளிரணி நிர்வாகி, தமிழரசி கலையரசி ,மாவட்ட மாணவாரணி செயலாளர் முத்தமிழ்செழ்வன் சுரேஷ், மணிவண்ணன், தொழிற்சங்க நிர்வாகிகள் சேகர் ஜோதிலெட்சுமி, சுரேஷ், இளையராஜா மணிமாறன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்