மழை, வளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் இதுவரை ரூ.2, லட்சத்து 43 ஆயிரத்து 450 மதிப்பிலான வரைவோலைகள் முதலமைச்சர் நிவாரண உதவிக்காக மாவட்ட நிர்வாகத்திடம் அளிக்கப்பட்டுள்ளது
வடக்கிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு உதவிடும் வகையில் தமிழக அரசு பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கிவருகின்றது. அதுமட்டுமின்றி பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் மழை,வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர் களுக்கு உதவிடும் வகையில் தங்களால் இயன்ற உதவிகளை பொருளாகவும், நிதியினை வங்கிவரைவோலையாகவும் அனுப்பி வருகின்றனர்.
அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்களும், கல்லூரி மாணவ, மாணவிகளும், தன்னார்வலர்களும் தங்களால் இயன்ற நிதிஉதவிகளையும், உணவுப்பொருட்கள், தண்ணீர் பாட்டில்கள், மருந்துபொருட்கள், பிரட் பாக்கெட், பாய் உள்ளிட்ட பொருட்களையும் மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கி வருகின்றனர்.
மாவட்ட நிர்வாகத்தின் மூலம் முறையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த உதவிகள் சென்று சேர்க்கப்படுகிறது.
முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வரைவோலைகளும் மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்தின் சார்பில் ரூ.70,000 மதிப்பிலும், பெரம்பலூர் ஒன்றியத்திற்குப்பட்ட ஊராட்சி மன்றங்களின் கூட்டமைப்பு சார்பில் ரூ.70,000 மதிப்பிலுமான வரைவோலைகளை பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் ஜெயக்குமார் , ஊராட்சிமன்றத் தலைவர்கள் செல்வகுமார் (கவுள்பாளையம்), சங்கர் (நொச்சியம்), ஜெகதீஸ் (ஆலம்பாடி) உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிமன்றத் தலைவர்களும் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து வழங்கினார்கள்.
மேலும், நகர்மன்றத் தலைவர் சார்பில் ரூ.70 ஆயிரம் மதிப்பிலும், வேப்பந்தட்டை வணிகர் சங்கங்கள் சார்பில் ரூ.15,000 மதிப்பிலும், இன்னும் பல்வேறு நல்ல உள்ளங்களின் சார்பிலும் இதுவரை மொத்தம் ரூ.2,43,450 மதிப்பிலான வரைவோலைகள் தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்காக மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கப்பட்டுள்ளது.
இதுதவிர பெரம்பலூர் மாவட்ட பிரஸ்கிளப் சார்பில் முதற்கட்டமாக 1.50 லட்சம் மதிப்பிலான நிவாரணப்பொருட்களும், பின்னர் ரூ.10,000 மதிப்பிலான 100 பாய்களும் வழங்கப்பட்டுள்ளது. பாடாலூர் ஊராட்சியும், பைன்பிட் நிறுவனமும் இணைந்து ரூ1.10 இலட்சம் மதிப்பிலான 1000 போர்வைகளையும், பூலாம்பாடி பேரூராட்சியும், அங்குள்ள தன்னார்வலரும் இணைந்து ரூ.2.20 லட்சம் மதிப்பிலா நிவாரண பொருட்களையும் மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கியுள்ளனர்.
இந்திய மருத்துவர்கள் கழகம் மற்றும் பெரம்பலூர் மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கம் இணைந்து, மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்ப 2.30லட்சம் மதிப்பிலும், தமிழ்நாடு அரசு மருத்துவர;கள் சங்கம் சார;பில் 1.06லட்சம் மதிப்பிலுமான மருந்துப்பொருட்களும் வழங்கப்பட்டுள்ளது.
பெரம்பலுhர; மாவட்ட அனைத்துத் துறை அலுவலர;கள், அலுவலர; சங்கங்கள், தன்னார;வலர;கள், சமூக ஆர;வலர;கள் உள்ளிட்ட பலரால் இதுவரை பெரம்பலுhர; மாவட்ட நிர;வாகத்தின் மூலம் 17 லாரிகள் மூலம் சுமார; ரூ.84,33,734 மதிப்பிலான நிவாரணப்பொருட்கள் மழை, வௌ;ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வழங்கப்பட்டுள்ளது.
நண்பர;கள், உறவினர;களிடம் நிதிதிரட்டி வழங்கிய மாணவர;கள்:
பெரம்பலுhர; மாவட்டம் குரும்பலுhர; ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5ஆம் வகுப்பு பயிலும் மாணவர;களான மு.மதன், மு.தீபக் ஆகியோர; தங்கள் உறவினர்களிடமும், நண்பர்களிடமும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் நிதி திரட்டி செய்து ரூ.2,500ம், மருவத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5ஆம் வகுப்பு பயிலும் செ.அமிர்தேஸ்வரன், 3 ஆம் வகுப்பு பயிலும் மு.முத்துக்குமார் ஆகிய மாணவர்கள் ரூ.1000ம் மாவட்ட ஆட்சியரிடம் நிவாரண நிதிக்கு வழங்கினர். மாணவர்களின் பேருள்ளத்தையும், மனிதநேய செயல்பாட்டையும் மாவட்ட ஆட்சியர் மனதார பாராட்டினார்.
ஆர்வமுடன் தொடரந்து 5 வது முறையாக சென்னைக்கு பயணித்த ஓட்டுநர்:
பல்வேறு நல்ல உள்ளங்கள் தங்களால் ஆன நிதியுதவிகளையும், பொருளுதவிகளையும் செய்து வரும் நிலையில், அந்த பொருட்களை சென்னைக்கு எடுத்துச்சென்ற பெரம்பலூர் வெங்கடேசபுரத்தைச் சேர்ந்த மினிலாரி ஓட்டுநர் டி.வினோத்குமார் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னால் இயன்ற உதவியை செய்ய வேண்டுமென்ற நோக்கத்தில் இதுவரை தொடரந்து 5 முறை தாமாக முன்வந்து சென்னைக்குப் பொருட்களை ஏற்றிச்சென்று பொறுப்பாக ஒப்படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் தமிழக முதலமைச்சரின் நிவாரண உதவிக்கு நிதி வழங்க விரும்பும் நபர்கள் “CHIEF MINISTER PUBLIC RELIEF FUND – CHENNAI” என்ற முகவரிக்கு வரைவோலை எடுத்து நிதித்துறை இணைச்சசெயலாளரிடம் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ வழங்கலாம். அல்லது வரைவோலையினை மாவட்ட ஆட்சியர; ஆலுவலகத்தில் உள்ள மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மாரிமுத்துவிடமோ வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே பல தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் சங்கங்கள் நேரிடையாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்றும் நேரிடையாகவும், நிவாரண உதவிகள் வழங்கி உள்ளனர். அவற்றையும் சேர்த்தால் இதுவரை சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து வழங்கப்பட்டுள்ளது.