பெரம்பலூர் : மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் அறிவிக்கப்பட்ட குரூப்-2 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.
பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இயங்கும் தன்னார்வப் பயிலும் வட்டத்தில் மாணவர்களுக்கு அவ்வப்போது வெளியிடப்படும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடத்தப்பட்டு வருகிறது.
இப்பயிற்சி வகுப்புகள் மூலம் பயின்ற பலரும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று அரசுப் பணியில் உள்ளனர். தற்பொழுது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள குரூப் -2 தேர்வுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகமும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து இலவச பயிற்சி வகுப்புகள் நடத்த உள்ளது.
இப்பயிற்சி வகுப்பு ஜுன்-4 முதல் துவங்க உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் சேர விரும்புவோர் ஆன்லைன் விண்ணப்பப்படிவத்தின் நகல், வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் செல்போன் எண் ஆகியவற்றுடன் உடனடியாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது தெரிவித்துள்ளார்.