பெரம்பலூர் : மாவட்ட ஆட்சித் தலைவர் தரேஸ் அஹமது வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான பூப்பந்து விளையாட்டுப்போட்டிகள் வரும் அக்07 அன்று காலை 9.00 மணியளவில் மாவட்ட விளையாட்டரங்கத்தில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு நடைபெற உள்ளது.
இப்போட்டிகளில் கலந்து கொள்வதற்கு வயதுவரம்பு கிடையாது. மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் தமிழ்நாட்டில் குறைந்தது 5 வருடங்களாவது வசித்து வருவதற்கான (Original Nativity Certificate) சான்றிதழைப் போட்டிகளில் பங்கு கொள்வதற்கு ஏதுவாக மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரிடம் போட்டிகள் நடைபெறும் நாள் அன்று கண்டிப்பாக சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
மாவட்ட அளவிலான போட்டிகளில் தேர்வு செய்யப்பட்டவர்கள் மட்டுமே மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள அரசு செலவில் அழைத்துச் செல்லப்படுவார்கள்.
மாவட்ட அளவிலான போட்டிகளில் தேர்வு செய்யப்படும் வீரர்,வீராங்கனைகளுக்கு மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ளும் பொருட்டு சீருடைகள் வழங்கப்படும்.
மாநில அளவிலான முதலமைச்சா; கோப்பைக்கான பூப்பந்து போட்டிகளில் முதல் நான்கு இடங்களைப்பெறும் அணிகளுக்கு முறையே தலா ரூ.10,000,மும் ரூ.7,500மும், ரூ.5,000மும், ரூ.3,000 மும் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது.
பூப்பந்து விளையாட்டுகளில் ஆண்கள் 7 நபர்கள், பெண்கள் 7 நபர்கள் என்ற எண்ணிக்கையில் போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும்.
மேற்கண்ட மாண்புமிகு முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான பூப்பந்து விளையாட்டுப்போட்டிகளில் பெரம்பலூர் மாவட்டத்தின் சார்பாக அதிக அளவில் வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டு நமது வெற்றிபெற்று நமது மாவட்டத்திற்குப் பெருமை சேர்க்க வேண்டும், என இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.