பெரம்பலூர் மாவட்டம் 2010-2011 கல்வி ஆண்டில் பள்ளிக் கல்வித் துறையின் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் மூலம் எளம்பலூர், செங்குணம், கூடலூர், தேனூர், சில்லக்குடி, மேலமாத்தூர், காரியனூர், பரவாய் ,அத்தியூர்(மேற்கு), பெரியம்மாபாளையம் , பீல்வாடி மற்றும் ஆதிதிரவிட நலப் பள்ளி பசும்பலூர் ஆகிய 12 பள்ளிகள் உயர் நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன.
இப்பள்ளிகளுக்கு வகுப்பறை கட்டிடம் கட்ட அரசின் மூலம் ஒரு பள்ளிக்கு ஒரு கோடியே அறுபது லட்சம் வீதம் 12 பள்ளிகளுக்கும் ரூ.19 கோடியே 20 இருபது லட்சம் நிதி ஒதிக்கீடு செய்யப்பட்டது. இதில் முதல் தவணையாக ரூ. 8 கோடியே 98 லட்சத்து 10 ஆயிரத்துக்கான நிதியினை தமழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கான காசோலையை ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அகமது பெரம்பலூர் மாவட்ட பொதுப் பணித்துறை உதவி செயற் பொறியாளர் செல்வராஜிடம் இன்று வழங்கினார்.
இந்நிகழ்வின்போது அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்ட உதவி மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளர் செ.காமராசு உடன் இருந்தனர்.