சென்னை : திரைப்பட பாடலாசியரியரும் கவிஞருமான வைரமுத்துவின் பிறந்த நாள் இன்று (ஜுன்.12) கவிஞர்களின் திருநாளாக கொண்டாப்படுகிறது.
கவிஞர் வைரமுத்து தனது பிறந்த நாளில் சிறந்த கவிஞர் ஒருவருக்கு விருது வழங்கி கவுரவிப்து வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு கவிஞர் சல்மா கவிஞர் திருநாள் விருதை பெற்றார்.
வைரமுத்து பிறந்த நாள் விழாவும், விருது வழங்கும் விழாவும், கோடம்பாக்கத்தில் உள்ள பொன்மணி மாளிகையில் நடைபெற்றது.
முன்னாள் தலைமை நீதிபதி கோகுல கிருஷ்ணன் தலைமை வகித்தார். எழுத்தாளர் சிவசங்கரி, மரபின் மைந்தன் முத்தையா, பெ.ராஜேந்திரன், கல்லாறு சதீஷ், கபிலன் வைரமுத்து, மதன் கார்க்கி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை வெற்றித் தமிழர் பேரவை செய்திருந்தது.
தலையை காப்பாற்ற தலைகவசம் அவசியம் , தலைமுறைகளை காப்பாற்ற மதுக்கடைகளை மூட வேண்டியது அவசியம் என வைரமுத்து பிறந்தநாள் விழாவில் பேசினார்.