பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்தள்ளதாவது ;

தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் இனத்தைச் சேர்ந்த நபர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பபட்டு வருகின்றது.

அதனடிப்படையில், பெண்களுக்கான மகளிர் நிலம் வாங்கும் திட்டம், இருபாலருக்கும் நிலம் மேம்படுத்துதல் திட்டம், தொழில் முனைவோர் பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தொழில்முனைவோர் திட்டங்களுக்கு வயது வரம்பு 18 முதல் 55 வரைக்குள் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூபாய் ஒரு இலட்சம் ஆகும். வாகனத் திட்டத்திற்கு விண்ணப்பிப்பவர் ஓட்டுநர் உரிமம் Badge மேலொப்பம் பெற்றிக்க வேண்டும்.
இளைஞர்களுக்கான சுயவேலை வாய்ப்பு திட்டத்திற்கு வயது வரம்பு 18 முதல் 35 வரைக்குள் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூபாய் ஒரு இலட்சம் ஆகும். வாகனத் திட்டத்திற்கு விண்ணப்பிப்பவர் ஓட்டுநர் உரிமம் Badge மேலொப்பம் பெற்றிக்க வேண்டும்.

தொழில் முனைவோர் பொருளாதார திட்டத்தின் கீழ் பெட்ரோல் டீசல் எரிவாயு சில்லரை விற்பனை நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு வயது வரம்பு 18 முதல் 55 வரைக்குள் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூபாய் மூன்று இலட்சம் ஆகும்.

இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் (MBBS, BS, MS, BDS, BPT D.Pharm / B.Pharm, Lab Technician / Para Medical Centre / படிப்பு முடித்தவர்களுக்கு மருத்துவமனை, மருந்துக்கடை, கண் கண்ணாடியகம், முட நீக்க மையம், இரத்தப் பாpசோதனை நிலையம் அமைத்தல் ஆகிய திட்டத்திற்கு குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூபாய் மூன்று இலட்சமாகும். அரசு அங்கீகார நிறுவனத்தில் உhpய பதிவு செய்திருக்க வேண்டும்.

மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கான சுழல் நிதி மற்றும் பொருளாதாரக்கடன், கலப்பு சுயஉதவிக் குழுக்களுக்கான சுழல் நிதி மற்றும் பொருளாதாரக்கடன், ஆண்கள் சுயஉதவிக் குழுக்களுக்கான சுழல் நிதி மற்றும் பொருளாதாரக்கடன், திருநங்கைகள் சுயஉதவிக் குழுக்களுக்கான சுழல் நிதி மற்றும் பொருளாதாரக்கடன், மாற்றுத்திறனாளிகள் சுயஉதவிக் குழுக்களுக்கான சுழல் நிதி மற்றும் பொருளாதாரக்கடன், ஆகிய திட்டங்களுக்கு வயது வரம்பு 18 முதல் 60 வரைக்குள் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூபாய் இரண்டு இலட்சமாகும்.

மாவட்ட ஆட்சியர் விருப்புரிமை நிதி திட்டத்தில் ஆதரவற்ற விதவைகள் மாற்றுத்திறனாளிகள் 40 வயதிற்கு மேற்பட்ட திருமணம் ஆகாத பெண்கள் மற்றும் பெற்றோர் பாதுகாவலர் இல்லாத குழந்தைகளுக்கு இத்திட்டத்தில் முன்னூரிமை வழங்கப்படும் இத்திட்டத்திற்கு வயது வரம்பு இல்லை.

மேலாண்மை இயக்குநர் விருப்புரிமை நிதி திட்டத்தில் விதவைகள், மாற்றுத்திறனாளிகள், பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் இல்லாத குழந்தைகள் எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மகளிர், ஆடவர் திருநங்கைகள், நலிந்த கலைஞர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும் இத்திட்டத்திற்கு வயது வரம்பு இல்லை.

இந்திய குடிமைப் பணி முதன்மைத் தேர்வு எழுதுவோருக்கு நிதி உதவி வழங்குதல் மற்றும் தமிழ்நாடு தேர்வாணையத் தொகுதி -1 (TNPSC Group-1) முதல் நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நிதியுதவி வழங்குதல் ஆகிய திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பவர்கள் 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும் குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூபாய். மூன்று இலட்சமாகும்.

சட்டப்பட்டதாரிகளுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தின் வயது வரம்பு 21 முதல் 45 வரை இருக்க வேண்டும்.

பட்டயக் கணக்கர், செலவு கணக்கர்களுக்கு நிதி உதவி வழங்குதல் திட்டத்தின கீழ் விண்ணப்பிப்பவா;கள் வயது வரம்பு 25 முதல் 45 வயது வரை ஆகும் குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு இத்திட்டத்திற்கு இல்லை.

மேற்கண்ட திட்டங்களில் பயன்பெற விரும்புபவர்கள் என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பத்தினை ஆன்லைனில் பதிவு செய்யவேண்டும். பதிவு செய்யும் போது விண்ணப்பதாரர் பற்றி விவரங்களுடன் குடும்ப அட்டை , இருப்பிடச்சான்று சாதிச்சான்று, வருமானச்சான்று, கல்வி தகுதி மற்றும் வயதிற்கான ஆதார சான்றிற்கு ( பள்ளி மாற்றுச் சான்று, வாக்காளர் அட்டை, ஓட்டுநர், உரிமம், பான் கார்டு, ஆதார் அட்டை, மதிப்பெண் சான்று) இவற்றில் ஏதாவது ஒன்றையும் மற்றும் TIN நம்பர் உள்ள நிறுவனத்திடமிருந்து பெற்ற விலைப்புள்ளி, திட்ட அறிக்கை பெறப்பட்ட தேதியையும் அதற்கான இடத்தில் குறிப்பிட்டு திட்ட அறிக்கை மற்றும் புகைப்படத்தையும் ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.

நிலம் வாங்கும் திட்டத்திற்கு மூல பத்திரம், விற்பனை உடன்படிக்கை பத்திரம், வில்லங்க சான்று, சர்வே எண், சிட்டா அடங்கல், நில பத்திரம் மற்றும் நிலம் விற்பவரது சாதிசான்று விவரங்களை பதிவு செய்து ஆவணங்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க உதவி தேவைப்படுபவர்களின் வசதிக்காக தாட்கோ, மாவட்ட மேலாளர்அலுவலங்களிலும் ரூ.20- செலுத்தி விண்ணப்பிக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை தகுதியுள்ள நபர;கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும், என இவ்வாறு மாவட்ட ஆட்சியர் அதில் தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்

Join Free Now https://dsmatrimony.com/

Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!