தாம் ஒரு போலி என தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் தெரிவித்துள்ள கருத்துக்கு நடிகரும் மக்கள்நீதி மய்யம் கட்சிநிறுவன தலைவருமான நடிகர் கமல் பதில் அளித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்த அவர் அரசியலுக்கு தாம் வந்திருப்பது பகுத்தறிவு கருத்துகளைப் பரப்புவதற்கு மட்டுமல்ல, ஊழலையும் லஞ்சத்தையும் ஒழிப்பதற்கும்தான் என கூறினார்.தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், தம்மை போலி என்று சொல்ல தமிழிசைக்கு என்ன உரிமை உள்ளது எனத் தெரியவில்லை என்றார்.