பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே தந்தை திட்டியதால் மனமுடைந்த பள்ளி மாணவி விஷம் குடித்து இன்று தற்கொலை செய்து கொண்டார்.
குன்னம் வட்டம் கொளப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் தர்மராஜ். இவரது, மனைவி மலர் இறந்து விட்டதால், இவர்களது மகள் ரேகா (13), அவரது தாத்தா நாராயணசாமி வீட்டில் தங்கி அங்குள்ள பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
தர்மராஜ் மறுமணம் செய்து கொண்டு தனிக் குடும்பம் நடத்தி வருகிறார். இந்நிலையில், தர்மராஜ் குடித்துவிட்டு அவரது தந்தை நாராயணசாமி மற்றும் மகள் ரேகாவிடம் நேற்று இரவு தகராறில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த ரேகா, விஷம் குடித்து இன்று உயிரிழந்தார்.
இதுகுறித்து நாராயணசாமி அளித்த புகாரின் பேரில், குன்னம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூபதி மீது வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்.