பெரம்பலூர் : நமக்கு நாமே திட்டம் திட்டத்தை விளக்கி பெரம்பலூர் நகர திமுக இளைஞரணி சார்பில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நாளை நடைபெறுகிறது.
பெரம்பலூர் நகர திமுக இளைஞரணி சார்பில் அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலினின் நமக்கு நாமே திட்டத்தை விளக்கி தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நாளை(செப்.24) மாலை 5 மணியளவில் துறைமங்கலம், சங்குப்பேட்டை, வடக்குமாதவி சாலை, காந்தி சிலை (பழைய பேருந்து நிலையம்), அரணாரை பகுதிகளில் பெரம்பலூர் நகர செயலாளர் ம.பிரபாகரன் தலைமையில் நடைபெறுகிறது.
இளைஞரணி செயலாளர்கள் து.ஹரிபாஸ்கர், சி.காட்டுராஜா, கரிகாலன், ரசூல் அஹமது, பி. அன்பழகன், தங்க.கமல் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.இராசா, கவிஞர்.நன்மாறன், மாவட்ட செயலாளர் குன்னம்.சி.ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் உள்பட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொள்கின்றனர்.