பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் பெரியார் விருது பெற்ற எஸ்.சிவசுப்ரமணியனுக்கு பாராட்டு விழா மாவட்ட அவைத் தலைவர் நடராஜன் தலைமையில் நடைபெறுகிறது.
மாவட்ட செயலாளர் குன்னம்.சி.இராஜேந்திரன் வரவேற்கிறார். மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளர் பா.துரைசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் எசனை மு.அட்சயகோபால், என்.ராஜேந்திரன், மாநில மருத்துவ அணி துணைச்செயலாளர் செ.வல்லபன், உள்பட பலர் முன்னிலை வகிக்கின்றனர்.
அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் ஆ.இராஜா, அரியலூர் மாவட்டச் செயலாளர் சிவசங்கர். மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சுபா.சந்திரசேகர் ஆகியோர் சிறப்புரை ஆற்றுகின்றனர்.
மாவட்ட துணைச் செயலாளர் வீ.ஜெகதீசன், பொறியாளரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான எம்.ராஜ்குமார், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் மருத்துவர் தேவராஜன் பொதுக்குழு, உறுப்பினர் வழக்கறிஞர் அணி ப.செந்தில்நாதன், ஒன்றிய செயலாளாகள் ஆலத்தூர் கிருஷ்ணமூர்த்தி, வேப்பூர் மதியழகன், வேப்பந்தட்டை நல்லத்தம்பி உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.
சட்ட திட்ட திருத்தக்குழு உறுப்பினரும், வழக்கறிஞருமான எஸ்.சிவசுப்ரமணியன் ஏற்புரை நிகழ்த்துகிறார். பெரம்பலூர் நகர செயலாளர் பிரபாகரன் நன்றி தெரிவிக்கிறார்.