பெரம்பலூர் : நமக்கு நாம் விடியல் மீட்புப் பயணத்தின் 2 ஆம் கட்ட பயணம் பெரம்பலூரில் கலந்து கொண்ட திமுக பொருளாளர் ஸ்டாலின் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் பேசியதாவது: பெரம்பலூரில் கடந்த திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை முடக்கி வருகிறது. இதனால் மக்களுக்கு முறையாக திட்டங்களின் பலனடையாமல் தடுக்கப்பட்டுள்ளது என்றார். முன்னதாக, பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ளஅம்பேத்கர் சிலையில் தனது 2ஆம் கட்ட நமக்கு நாம் விடியல் மீட்புப் பயணத்தை துவக்கிய அவர், காந்தி சிலை, பெரியார் சிலை, காமராஜர் வளைவு வழியாக வடக்கு மாதவி சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்த மகளிர் சுய உதவிக்குழு பெண்களுடன் கலந்துரையபடினார்.