திருச்சி மண்டல அளவிலான பாலி டெக்னிக் கல்லூரிகளுக்கு இடையே நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள கீழமாத்தூர் வரதராஜன் பாலி டெக்னிக் கல்லூரி மாணவி எஸ்.ஐஸ்வரியா, வட்டு எறிதல் போட்டியில் முதல் இடத்தை பிடித்தார்.
மேலும் குழு போட்டிகளான எறிபந்து போட்டியில் 2ம் இடத்தையும், டென்னிக்காய்ட் போட்டியில் நான்காம் இடத்தையும் மாணவிகள் பெற்றனர்.
வட்டு எறிதல் போட்டியில் முதலிடம் பிடித்த ஐஸ்வர்யா என்ற மாணவி மாநில அளவிலான நடைபெற உள்ள போட்டிக்கு தகுதி பெற்று உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளை கல்லூரி தாளாளர் கே. சிவக்குமார் , கல்லூரி முதல்வர் இளையராஜா, அலுவலக மேலாளர் பாலகிருஷ்ணன், மற்றும் துறை தலைவர்கள் பேராசிரியர்கள் பாராட்டினர் சிறப்பாக பயிற்சி அளித்த உடற்கல்வி இயக்குனர்கள் சேது, பாலமுருகன் ஆகியோர் பாராட்டப்பட்டனர்.