திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை ஸ்ரீ தேவியின் குடும்பத்தினர் சாமி தரிசனம் செய்தனர். மறைந்த திரைப்பட நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிக்கபூர், அவருடைய மகள்கள் ஜான்விகபூர், குஷிகபூர் மற்றும் ஸ்ரீ தேவியின் தங்கை மகேஷ்வரி ஆகியோர் இன்று காலை திருப்பதி ஏழுமலையானை கும்பிட்டனர். சாமி தரிசனத்திற்காக நேற்று இரவு திருமலைக்கு வந்த அவர்கள் இன்று காலை வி.ஐ.பி தரிசனத்தில் ஏழுமலையானை தரிசித்தனர்.