பெரம்பலூர் அருகே திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருமாந்துறை கிராமத்தில் உள்ள சுங்கச் சாவடியில் தானியங்கி (FASTAG ) வழித் தட சேவையை தனலட்சுமி சீனிவாசன் குழுமங்களின் தலைவர் அ.சீனிவாசன் கொடியசைத்து துவங்கி வைத்தார்.

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் உத்தரவின் பேரில் உத்தரவின் பேரில் கடந்த 2013ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டு நடப்பாண்டு (2016 – 2017) இந்தியா முழுவதும் உள்ள 275 சுங்கச்சாவடிகளில் விரிவு படுத்தும் விதமாக நேற்று ஏராளமான சுங்கச்சாவடியில் தாணியங்கி வழித்தட சேவை (எலக்ட்ரிக் டோல் கலெக்ஷன்) துவக்கவிழா நேற்று நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் அருகே திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருமாந்துறை கிராமத்தில் உள்ள சுங்கச்சாடியில் நடைபெற்ற தாணியங்கி வழித்தட சேவை விழாவிற்கு இந்திய தேசியநெடுஞ்சாலை துறை திருச்சி மண்டல திட்ட இயக்குனர் பிரசாந்த்ரெட்டி தலைமை வகித்தார்.

இந்திய தேசியநெடுஞ்சாலை துறையின் திருச்சி மண்ட வட்டாச்சியர் சுடலையாண்டி, கணக்கு அதிகாரி வைத்தியநாதன் மற்றும் திருச்சி டோல்வே பி லிமிடெட் தலைமை செயல் அலுவலர் கேப்டன் பனிக்கர் ஆகியோர் முன்னிலை வகித்தார்.

விழாவில் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் குழுமங்களின் தலைவர் சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, ஆட்டோமேட்டிக் வழித்தட சேவையை துவக்கி வைத்து பேசினார்.

விழாவில் இந்திய தேசியநெடுஞ்சாலை துறை திருச்சி மண்டல திட்ட இயக்குனர் பிரசாந்த்ரெட்டி பேசியதாவது,

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் துவங்கப்பட்டுள்ள தானியங்கி வழித்தட சேவை மூலம் சுங்கச்சாடியை கடந்து செல்லும் வாகனங்கள் வரிசையில் காத்திருக்காமல் 30 கிலோ மீட்டர் வேகத்தில் கடந்து செல்வதால் பயண நேரம் குறைவததோடு, எரி பொருள் மிச்சமும், சுற்று சூழல் மாசு பாடும் பாதுகாக்கப்படுகிறது.

மேலும் சுங்கச்சாடிகளில் செலுத்தும் சுங்க வரி வாகனங்களின் முகப்பு கண்ணாடியில் ஓட்டப்படும் சென்சார் ஸ்டிக்கர் கார்டு மூலம் 50 மீட்டர் தூரத்தில் வாகனம் வரும் போதே வரவு வைக்கப்பட்டு வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும்.

இந்த ETC கார்டை பெற்றிட வாகன பதிவு சான்று, இருப்பிடம் மற்றும் அடையாள அட்டை போன்றவற்றை அருகிலுள்ள ஐசிஐசிஐ வங்கி கிளையிலோ அல்லது சுங்கச்சாவடி அலுவலகத்தையோ தொடர்பு கொள்ளலாம். நடப்பாண்டில் இடிசி கார்டு பெறும் அனைவருக்கும் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும்.

சுங்க வரிக்காக முன்னதாக வங்கிகள் மற்றும் சுங்கச்சாவடிகளில் செலுத்தும் பணம் வாகனங்கள் கடந்து செல்லும் போது டோல் பிளாசாவில் சென்சார் ஸ்டிக்கர் கார்டு மூலம் வசூல் செய்யப்படும் போது அனைத்து பரிவார்த்தனைகளும் குறுந்தகவல் மூலம் செல்போனுக்கு தெரிவிக்கப்படும்.

தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்கள் காத்திருந்து கட்டணம் செலுத்தும் நிலைய மாற்றிட மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த சேவையை வாகன ஓட்டிகள் அனைவரும் பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

விழாவில் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சிவக்குமார், வேப்பூர் ஒன்றிய திமுக செயலாளர் மதியழகன், சுங்கச்சாவடி மேலாளர்கள் அருண்ராஜ், கிருஷ்ணமூர்த்தி, இன்ஜினியர்கள் இரத்தினவேல், சீனிவாசன் மற்றும் ஊழியர்கள், பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!