சினிமா வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி, பண மோசடி செய்ததாக, பவர் ஸ்டார் சீனிவாசன் மீது சென்னை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.திரைப்பட நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன், நிதி நிறுவனங்களில் கடன் வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாக, ஏற்கெனவே டெல்லி மற்றும் பெங்களூர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.இந்நிலையில், சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி, பவர் ஸ்டார் சீனிவாசன் 4 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் மோசடி செய்துவிட்டதாக, புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த தயாநிதி என்பவர் போலீசில் புகார் அளித்திருந்தார்.