பெரம்பலூர் மாவட்டத்தில் திறக்கப்பட உள்ள அம்மா உணவகங்களை ஆட்சியர் ஆய்வு
பெரம்பலூர் : தமிழக முதல்வர், ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலையில் தரமான உணவு வகைகளை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுத்தி வரும் திட்டமான “அம்மா உணவகம்” திட்டத்தின் கீழ் பெரம்பலூர் நகராட்சியில் இரண்டு இடங்களில் தலா ரூ.25 லட்சம் வீதம் ரூ50 லட்சம் மதிப்பீட்டில் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனை மற்றும் புதிய பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள அம்மா உணவகங்களின் சமையற் கூடம், உணவு வழங்குமிடம், பொருட்கள் சேமிப்பு அறை, கைகழுவும் அறை, உணவு உண்ணும் அறைகளை மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
புதிய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டு வரும் அம்மா உணவகத்தில் பொது மக்கள் வந்து செல்ல ஏதுவாக பேருந்து நிலையத்திலிருந்தும், பிரதான சாலையிலிருந்தும் உணவகத்திற்குள் செல்லும் வகையில் இரண்டு நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது நகராட்சி ஆணையாளா; முரளிதரன், நகராட்சி பொறியாளர் தாண்டவமூர்த்தி உள்ளிட்ட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.