20151002_grama
அண்ணல் மகாத்மா காந்தியடிகளின் பிறந்த தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் 121 ஊராட்சிகளிலும் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் மேலப்புலியூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது:

ஊராட்சிகளின் வெளிப்படையான நிர்வாகம் நடைபெற வழிவகை செய்வதற்காகத்தான் இன்றைய தினம் கிராம சபை கூட்டம் நடைபெறுகின்றது. அரசின் திட்டங்கள், பயன்கள் குறித்து தொpந்து கொள்ள அனைவரும் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்க வேண்டும். ஜனநாயகத்தின் முக்கிய பங்கு கிராமசபை ஆகும். வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் உள்ளதா என்று பொதுமக்கள் சரிபார்க்க வேண்டும். வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டுள்ளவர்கள் தங்கள் பெயரை சேர்க்க, திருத்தம் செய்ய பல்வேறு வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.

பெரம்பலூர் மாவட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி 2016ம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப்பணி 15.09.2015 முதல் 14.10.2015 வரை நடைபெற்துறுகிறது. அது சமயம் 01.01.2016 தேதியன்று தகுதியான நாளாக கொண்டு 18 வயது பூர்த்தியான வாக்காளர்களின் பெயர்களை புதிதாக வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர், முகவரி போன்ற திருத்தங்களை மெற்கொள்ளவும், பெயர் நீக்கம் செய்யவும் விண்ணப்பிக்கலாம். இதற்காக வருகின்ற 04.10.2015ஆம் தேதியன்று சிறப்பு முகாம்கள் அந்தந்த வாக்குசாவடிகளில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை பொதுமக்கள் முறையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

வளர்ந்து வரும் விஞ்ஞான வளர்ச்சியில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றது. அன்றாடம் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப நாமும் மாறி வருகின்றோம். ஆனால் பெரம்பலூர் மாவட்டத்தில் இன்னும் சில ஊராட்சிகளில் திறந்த வெளி கழிப்பிடங்களை மக்கள் பயன்படுத்திவருகிறார்கள். இந்த நிலை மாற வேண்டும்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் முழு சுகாதாரத்தை ஏற்படுத்தும் விதத்தில் தூய்மை பாரத இயக்கம் மற்றும் மகாத்மா காந்தி தேசிய வேலை வாய்ப்பு உறுதிதிட்டத்தின் மூலம் அனைத்து இல்லங்களிலும் மத்திய, மாநில அரசுகளின் மானிய உதவித்தொகையாக ரூ.12,000 மதிப்புடன் கழிவறைகள் அமைக்கப்பட்டு வருகின்றது. இத்திட்டத்திற்காக மகாத்மா காந்தி தேசிய வேலை வாய்ப்பு உறுதிதிட்டத்தின் வாயிலாக 15 நாட்களுக்கான ஊதியமாக ரூ.2,745-ம், கழிவறை கட்டிய பிறகு மீதமுள்ள ரூ.9,255 தொடர்புடைய ஊராட்சியின் மூலம் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.

பெரம்பலூர் மாவட்டத்தில் தனி நபர் இல்ல கழிவறை அமைக்கும் திட்டத்திற்காக மாவட்டம் முழுவதும் 68,435 இல்லங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தேர்வு செய்யப்பட்டுள்ள இல்லங்களில் 15,500 கழிவறைகளின் கட்டுமான பணிகள் நிறைவடைந்து பயன்பாட்டிற்கு வந்துள்ளது. மேலும் நடப்பாண்டில் 17 ஊராட்சிகளில் 100 சதவீத தனிநபர் இல்ல கழிவறைகள் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது. அதேபோல நமது மேலப்புலியூர் ஊராட்சியில் தனிநபர் கழிப்பறைகள் கட்ட பொதுமக்கள் முன்வர வேண்டும்.

இன்னும் 3 மாதங்களுக்குள் மேலப்புலியூரில் திறந்த வெளிக்கழிப்பிடம் இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்ற உறுதி மொழியை மாவட்ட நிர்வாகத்திற்கு ஊர்ப்பொதுமக்கள் வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் பேசினார்.

அதனைத்தொடர்ந்து ஊர்ப்பொதுமக்களும் 3 மாதங்களுக்குள் அனைத்து வீடுகளிலும் தனிநபர் கழிப்பிடம் கட்டி முடிப்போம் என்று உறுதியளித்தனர். பின்னர் மேலப்புலியூரில் உள்ள கிராமங்களில் மாகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத்திட்டத்தின் கீழ் 100 நாள் வேலைவாய்ப்பு பெற்றவர்கள் பட்டியல், வரைவு வாக்காளர் பட்டியல் ஆகியவை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.

ஊராட்சியில் நடைபெற்ற வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. ஊராட்சியில் குடிநீர் வழங்கும் பணி, சுகாதாரம், பால் உற்பத்தி, தெரு விளக்குகள், குழந்தைகள் மைய செயல்பாடு, அடிப்டை கட்டமைப்பு வசதிகள், கழிப்பிட வசதி, விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டன. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்பட்ட வளர்ச்சிப்பணிகள் குறித்தும், இந்த ஆண்டு மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும் பொதுமக்களுடன் விவாதிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் மேலப்புலியூர் ஊராட்சி மன்றத் தலைவர் ந.செல்லம் மற்றும் ஊர்ப்பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!