சென்னை தி.நகரில் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான குடிநீர் குழாய்கள் மாற்றும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. மத்திய சென்னை தொகுதி ஆயிரம் விளக்கு பகுதி 117-வது வார்டுமுழுவதும் உள்ள தாமஸ் ரோடு , போக் ரோடு குடியிருப்புகளில் கடந்த 40 ஆண்டுகளாக உள்ள குடிநீர் குழாய்களை மாற்றி புதிய குடிநீர் குழாய் அமைக்கும் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது.இதையொட்டி நடைபெற்ற பூமி பூஜை வட்ட செயலாளரும் முன்னாள் கவுன்சில ருமான பி.ஆறுமுகம் என்ற சின்னையன் தலைமையில் நடைபெற்றது.இதில் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் பா. வளர்மதி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.விஜயகுமார் பங்கேற்று தொடங்கி வைத்தனர். இதில் குடிநீர் வாரிய அதிகாரிகள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.