2016 சட்டசபை தேர்தலுக்கான தி.மு.க., தேர்தல் அறி்க்கையில் சின்னமுட்லு அணைக்கட்டு திட்டம் சேர்க்கப்படும் என முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.இராஜா தெரிவித்தார்.
பெரம்பலுார் மாவட்டம் விசுவக்குடியில் கல்லாற்றின் குறுக்கே பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதார துறை மூலம் ரூ.33.07 கோடியில் 30.67 மில்லியன் கன அடி நீரை 10.30 மீட்டர் ஆழத்துக்கு நீரை சேமிக்கும் வகையில் புதிதாக கட்டப்பட்டுள்ள விசுவக்குடி அணையை முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.இராஜா இன்று நேரில் பார்வையிட்டார்.
அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
விசுவக்குடி அணைக்கட்டுத்திட்டம் கடந்த தி.மு.க., ஆட்சி காலத்தில் அப்போதைய முதல்வர் கருணாநிதியால் அறிவிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு
செய்யப்பட்டது. இந்த அணையில் 30.67 மில்லியன் கன அடி நீரை 10.30 மீட்டர் ஆழத்துக்கு சேமிக்கும் முடியும். இதன் மூலம் சுமார் 2,400 ஏக்கர்
நிலம் பாசன வசதி பெறும். இப்பகுதி மக்களும், விவசாயிகளும் கருணாநிதிக்கு நன்றி தெரிவிக்கின்றனர். நன்றியோடு நினைத்து பார்க்கின்றனர்.
கடந்த தி.மு.க., ஆட்சியில் பெரம்பலுார் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டு, கிடப்பில் போடப்பட்ட பெரம்பலுார் மருத்துவக்கல்லுாரி, சிறப்பு பொருளாதார
மண்டலம் மீண்டும் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். 2016 சட்டசபை தேர்தலுக்கான தி.மு.க., தேர்தல் அறி்க்கையில் சின்னமுட்லு அணைக்கட்டு திட்டம் சேர்க்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அப்போது கட்சி பிரமுகர்கள் மாவட்ட செயலாளர் குன்னம்.ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ ராஜ்குமார், மாநில மருத்துவர் அணி பொறுப்பாளர் டாக்டர்.வல்லபன், பெரம்பலூர் நகர செயலாளர் ம.பிரபாகரன், வேப்பந்தட்டை ஒன்றிய செயலாளர் நல்லத்தம்பி உள்பட ஏராளமானோர் உடன் இருந்தனர்.