தீண்டாமை ஒழிப்பு முன்னணி இயக்க சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் ப. காமராஜ் தலைமையில் நடபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், அக். 19 ஆம் தேதி ஹரியானா மாநிலம் பரிதாபாத் அருகேயுள்ள சோன்பெட் கிராமத்தில் ஜிதேந்தர் என்பவரது வீட்டில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொளுத்தியதை கண்டித்தும், இதில் உயிரிழந்த ஜிதேந்தர் குடும்பத்தினருக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.
தலித் இனத்தை தரக்குறைவாக பேசிய மத்திய வெளியுறவு இணை அமைச்சர் வி.கே. சிங்கை பதவி நீக்கம் செய்து, அவரை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் டாக்டர். மு. தேவராஜன், மதிமுக மாவட்டச் செயலர் செ. துரைராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் வீ. ஞானசேகரன், தீண்டாமை ஒழிப்பு மாவட்டத் தலைவர் என். செல்லதுரை ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்திற்கு, திராவிடர் கழக மாவட்டத் தலைவர் ஆறுமுகம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி இயக்க நிர்வாகி பி. கிருஷ்ணசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட கட்சி வட்டச் செயலர் (பொ) எஸ்.பி.டி. ராஜாங்கம், வழக்குரைஞர் ஸ்டாலின், மாதர் சங்க மாவட்டச் செயலர் பி. கலையரசி, மாவட்டக் குழு உறுப்பினர் எஸ். அகஸ்டின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.