பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பேக்கரி ஒன்றில் கேஸ் சிலிண்டர் வெடித்து தீவிபத்து ஏற்பட்டதாக வந்த அழைப்பின் பேரில், பெரம்பலூர் தீயணைப்பு அலுவலர் ஆறுமுகம் தலைமையில் தீயணைப்பு வீரர்கள், 3 வாகனங்களில் கிருஷ்ணாபுரம் சென்று தீயணைக்க விசாரித்தனர்.
அப்போது அங்கு தீவிபத்து ஏற்படவில்லை என்றும், தவறாக அழைக்கப்பட்டு அலைகழிக்கப்ட்டதாக தீயணைப்பு துறையினருக்கு தெரிய வந்தது. இதுகுறித்து தீயணைப்பு நிலைய அலுவலர் ஆறுமுகம் கொடுத்த புகாரின் பேரில் அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிந்து தீயணைப்பு வீரர்களை அலையவிட்ட ஆசாமியை செல்போன் எண் கொண்டு அடையாளம் காண தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.