பெரம்பலூர் : வேப்பந்தட்டை அருகே தீராத வயிற்றுவலியால் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் பூச்சு மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள வெண்பாவூரை சேர்ந்தவர் ரவி (வயது44), இவர் வெண்பாவூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் செயலாளராக பணியாற்றி பதவி உயர்வின் மூலம் பெரம்பலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக ரவி தீராத வயிற்றுவலியால் அவதிபட்டு வந்ததாக கூ றப்படுகிறது. இன்று காலை வழக்கம் போல் அலுவகத்திற்கு சென்றுள்ளார். அப்போது திடீரென வயிற்றுவலி ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த ரவி அலுவலகத்தில் யாரிடமும் சொல்லாமல் சொந்த ஊரான வெண்பாவூருக்கு கிளம்பி வந்துள்ளார். பின்னர் ஊருக்கு அருகிலுள்ள புளியமரத்தடியில் பூச்சி மருந்து குடித்து வாயில் நுரை தள்ளியபடி மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் உறவினர்கள் ரவியை மீட்டு பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு போய் சேர்த்தனர்.
அங்கு ரவியை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து கை.களத்தூர் காவல் நிலையத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக காவல் துறையினர் விரைந்து வந்து ரவியின் உடலை கைப்பற்றி உடற் கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுக் குறித்து உதவி ஆய்வாளர் காமராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.