பெரம்பலூர், ஜூலை 2- பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூர் கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் ஏற்பட்ட தீ விபத்தில் செபஸ்தியான் என்பவரது கூரை வீடு முற்றிலும் எரிந்து சாம்பலானது.
தீ விபத்தில் வீடு இழந்த செபஸ்தியான் குடும்பத்தினருக்கு குரும்பலூர் நகர அ.தி.மு.க., சார்பில் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது.
இந்நிகழ்ச்சியில் அ.தி.மு.க., குரும்பலூர் நகர செயலாளர் செல்வராஜ், செபஸ்தியான் குடும்பத்தினருக்கு ஐந்தாயிரம் ரூபாய் ரொக்கப்பணம், வேஷ்டி, சேலை, வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் நகர செயலாளர் புஸ்பராஜ், கூட்டுறவு ராமையா, கிளை செயலாளர்கள் அழகேசன், முத்துசாமி, சுப்ரமணியன், கதிரவன், அருன்குமரன், நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், அம்மா பேரவை மருதை, மேலவை பிரதிநிதி குழந்தைசாமி, பட்டரை கணேசன், மாவட்ட பிரதிநிதி ராமச்சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்