துனீசியாவில் வன்முறையை போதிப்பதாக குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள 80 பள்ளிவாசல்களை மூட உள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
துனீசியாவின் சுற்றுலா ரெசார்ட்டில் நேற்று வெள்ளிக்கிழமை நடந்த துப்பாக்கித் தாக்குதலில் 38 பேர் அநியாயமாக மதவெறி காரணமாக அப்பாவிகள் கொல்லப்பட்ட சம்பத்தை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் ஐரோப்பியர்கள். துப்பாக்கிச்சூட்டை நடத்தியவரும் சுட்டுக்கொல்லப்பட்டுளடளனர்.
அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்கு மீறி வெளியில் இயங்கும் குறித்த பள்ளிவாசல்கள் ஒருவார காலத்தில் மூடப்படும் என்று துனீசியாவின் பிரதமர் ஹபீப் எஸ்ஸித் கூறினார்.
இந்தத் தாக்குதலுக்கு இஸ்லாமிய அரசு தீவிரவாதிகள் உரிமைகோரியிருந்தனர்.
இந்தத் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து பெருமளவிலான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அந்நாட்டிலிருந்து வெளியேறிவருவதாக அங்குள்ள செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
நாட்டின் சுற்றுலா மையங்கள் அனைத்திலும் அரசு பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது. ஆனாலும் சுற்றுலா பயணிகள் வருகை எண்ணிக்கை குறைய துவங்கி விட்டது.