தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடத்தியது குறித்து முதலமைச்சர் அறிக்கையில் விரிவாக தெரிவிக்கவில்லை என்று கூறி சட்டப்பேரவையில் இருந்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடத்தியது குறித்து முதலமைச்சர் , போலீஸ் அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவுசெய்ய வேண்டும் என்றும், போலீஸ் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.அமைச்சரவையை கூட்டி ஸ்டெர்லைட்டை மூட தீர்மானம் போட வேண்டும் என்றும் அவர் கூறினார். முன்னதாக, துப்பாக்கிச்சூடு என்ற வார்த்தையை ஏன் அறிக்கையில் முதலமைச்சர் பழனிசாமி குறிப்பிடவில்லை என சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். துப்பாக்கிச்சூடு நடந்ததை தமிழக அரசு ஒப்புக்கொள்ளவில்லை என்றும் குற்றம்சாட்டினார். இதனிடையே, நாளை திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் மாதிரி சட்டமன்ற கூட்டம் நடைபெறும் என்று மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.