தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு கண்டனம் தெரிவித்து சென்னையில் திமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி கைதுசெய்யப்பட்டார். தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் பல்வேறுகட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒருப்பகுதியாக சென்னை எழும்பூரில், திமுக சார்பில் மாநிலங்களைவை உறுப்பினர் கனிமொழி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட ஏராளமானோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட கனிமொழி,திருமாவளவன் ஆகியோரை போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.