தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து ஏன் சிபிஐ விசாரணை நடத்த கூடாது மீண்டும் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இது குறித்து இன்று விசாரணை நடத்தியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான ஆவணங்கள் மற்றும் காவல்துறை வசம் உள்ள வீடியோ பதிவுகளை ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டுள் ளது.மதுரை கிளையில் நிலுவையில் இருக்கும் வழக்குகளை மாற்றம் செய்ய முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ள உயர்நீதிமன்றம், காவல்துறையின் புலன் விசாரணையில் தலையிட முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளது. தலைமை நீதிபதி பொதுவான குற்றச்சாட்டு குறித்தும் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனவும், அத்துமீறலில் யார் ஈடுப்பட்டாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள் ளது. இதை தொடர்ந்து தமிழக அரசு பதில் அளிக்க கால அவகாசம் வழங்கி வழக்கு விசாரணையை 9 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.