பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து வரும் நவ.8.அன்று நடைபெற உள்ள தேசிய திறனாய்வுத் தேர்வில் 2,177 மாணவ,மாணவிகள் எழுதவுள்ளனர் என மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் க.முனுசாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
தற்போது 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இத்தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவியர்களில் கட்ஆப் மதிப்பெண் அடிப்படையில் தேர்வாகும் நபர்களுக்கு 10 ஆம் வகுப்பு முதல் மாதம் ரூ.500 வீதம் உதவித்தொகை வழங்கப்படும்.
பெரம்பலூர் மாவட்டத்தில் தேசிய திறனாய்வுத் தேர்வு -NTS Exam 08.11.2015 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.30 மணி முதல் நடைபெறவுள்ளது. இதில் 9.30 மணி முதல் 11.00 மணிவரை மனத்திறன்-மொழித்தேர்வும், 11.30 மணி முதல் 1.00 மணிவரை படிப்பறிவுத் தேர்வும் நடைபெற உள்ளது.
பெரம்பலூர் ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 508 நபர்களும், பெரம்பலூர் தந்தை ரோவர் மேல்நிலைப் பள்ளியில் 615 நபர்களும், புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 342 நபர்களும், குன்னம் அரசுமேல்நிலைப்பள்ளியில் 308 நபர்களும், பாடாலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 190 நபர்களும், வேப்பந்தட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் 214 நபர்களும் ஆக மொத்த 2,177 மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுத உள்ளனர், என மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.