பெரம்பலூர்: தேசிய அளவிலான எறிபந்து போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு எஸ்.டி.ஏ.டி. ஊக்கத்தொகைக்கான காசோலையினை மாவட்ட ஆட்சியர் தரேஸ்அஹமது வழங்கி வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
2014-2015-ஆம் ஆண்டிற்கு நடைபெற்ற தேசிய அளவிலான எறிபந்து போட்டிகளில் பெரம்பரு}ரைச் சேர்ந்த விஸ்டம் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் எம்.அமானுல்லா, சையது தாஹிர் ஆகிய இருவரும் முதலிடம் பெற்றனர். அவர்களுக்கு எஸ்.டி.ஏ.டி. சார்பில் ஊக்கத்தொகை ரூ.ஆறு ஆயிரத்திற்கான காசோலையினை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது, வீரர்கள் இருவருக்கும் வழங்கி வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தார். அருகில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் இராம சுப்பிரமணியராஜா மற்றும் எறிபந்து பயிற்சியாளர் கண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.