தமிழ்நாடு மாநில சுகாதார திட்டத்தின் கீழ் பெரம்பலூர் மாவட்டத்தின் மாவட்ட விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம் நாளை ஜன.12 மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது.
மாவட்ட விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழுவின் தலைவர்களான, பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர்களுமான ஆர்.பி.மருதராஜாஇணைத்தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான சந்திரகாசி ஆகியோர் தலைமையிலும், குழுவின் உறுப்பினர், செயலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான டாக்டர். தரேஸ் அஹமது முன்னிலையிலும் நாளை மாலை 4 மணிக்கு மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது.
விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழுவில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர், குன்னம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர், முதன்மை கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர், மாவட்ட சமுகநலத் துறை அலுவலர், நகராட்சி ஆணையர், பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பூர் மற்றும் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியக் குழுவின் தலைவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
இக்கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் தேசிய ஊரக நலத்திட்ட செயலாக்கம் தொடர்பான பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது, என சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் ப.சம்பத் தெரிவித்துள்ளார்.