பெரம்பலூர்: பெரம்பலூரில் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட தேசிய ஒருமைப்பாட்டு தின விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது. இதில் ஏராளமான பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி நினைவு தினத்தை தேசிய ஒருமைபாட்டு தின விழிப்ணர்வு பேரணி, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடத்தப்பட்டது. இந்த விழிப்புணர்வுப் பேரணியை சார் ஆட்சியர் மதுசூதன்ரெட்டி தொடங்கி வைத்தார். தேசிய ஒருமைப்பாடு விளக்கும் வகையில் பள்ளி மாணவர்கள் கோஷங்கள் எழுப்பிச் சென்றனர்.பெரம்பலூர் பழையபேருந்து நிலையில் அருகேயுள்ள வட்டாச்சியர் அலுவலகத்திலிருந்து தொடங்கிய இப்பேரணி புதிய பேருந்து நிலையத்தில் நிறைவுற்றது.இதில் ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.