இன்று 19.11.2015 முதல் 25.11.2015 வரையிலான தினங்கள் தேசிய ஒருமைப்பாட்டு வாரமாக கொண்டாடப்படுவதை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கருத்தை மையப்படுத்தி பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து பல நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் 20.11.2015 சிறுபான்மையினர் நல தினமாக, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பிலும், 21.11.2015 ஆம் நாள் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் மொழிநல்லிணக்க தினமாகவும், 22.11.2015 ஆம் நாள் ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் நலிவுற்ற பிரிவினர் தினமாகவும், 23.11.2015 ஆம் நாள் மாவட்ட அரசு இசைப்பள்ளியின் சார்பில் கலாச்சார ஒற்றுமை தினமாகவும், 24.11.2015 ஆம் நாள் மகளிர் திட்டம் மற்றும் சமூக நலத்துறையின் சார்பில் பெண்கள் தினமாகவும், 25.11.2015 ஆம் நாள் வனத்துறையின் சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினமாகவும் கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது.
மேற்கண்ட தினங்களில் சம்மந்தப்பட்ட துறைகள் தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் வகையில் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி உள்ளிட்ட கலை, இலக்கியப் போட்டிகளையும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி பொதுமக்களிடையே தேசிய ஒருமைப்பாட்டின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்க உள்ளார்கள் என மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.