பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் மற்றும் சமூக நல துறை இணைந்து நடத்திய தேசிய ஒருமைப்பாட்டு வார விழா மகளிருக்கான சிறப்பு மேளாவாக மாவட்ட ஆட்சியரக கூட்ட மன்றத்தில் இன்று நடைபெற்றது.
இவ்விழாவில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் மலர்விழி, “நாட்டின் ஒருமைப்பாட்டில் பெண்களின் பங்கு” என்ற தலைப்பில் விரிவாக பேசினார். “வண்ணமயமான இந்தியா” என்ற தலைப்பில் சமூக நலத்துறை மூலம் மாவட்ட சமூக நல அலுவலர் தமீமுன்னிசா சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவா; அவா;களால் பரிசுகள் வழங்கப்பட்டது.
“பெண்களின் சட்டங்கள் மற்றும் உரிமைகள் நம் நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு வித்திட்டு மேம்படுத்துதல்” சம்பந்தமாக வழக்கறிஞர் ராதா அவர்களால் பெண்களின் சட்டங்கள் மற்றும் உரிமைகள் குறித்து பல்வேறு கருத்துக்கள் எடுத்துரைக்கப்பட்டது.
இன்றைய நிகழ்ச்சியில் “கலர்புல் இந்தியா” எனும் தலைப்பின் கீழ் இந்திய வரைப்படத்திற்கு வண்ணம் தீட்டும் போட்டியில் வெற்றிப்பெற்ற மகளிர் சுய உதவிக் குழுவினர்களுக்கு மாவட்ட ஆட்சியர் டாக்டர் தரேஸ்அஹமது பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
இச்சிறப்பு மேளாவில் பெரம்பலூர் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் மலர்விழி, மாவட்ட சமூக நல அலுவலா;, செல்வி.அ. தமீமுன்னிசா, வழக்கறிஞா; செல்வி. ராதா, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க உதவித் திட்ட அலுவலா; திரு.பெ. வெங்கடேசன், மாவட்ட சமூக நல துறை அலுவலகப் பணியாளர்கள், மகளிர் திட்டம் மற்றும் புதுவாழ்வுத் திட்டத்தைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி அளவிலான குழுக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் மற்றும் கிராம வறுமை ஒழிப்புச் சங்க உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.