பெரம்பலூர் மாவட்ட தேமுதிக சார்பில் இயன்றதைச் செய்வோம் இல்லாதவர்க்கே’ என்ற தேமுதிக கொள்கையின்படி வசதிபடைத்தவர்கள், தங்களால் இயன்ற உதவிகளை ஏழை, எளிய மக்களுக்கு செய்து அவர்கள் உறவினர்களோடும், நண்பர்களோடும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என இயேசு பிறந்த நாளான கிறிஸ்துமஸ் பண்டிகையை தேமுதிக வினர் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் துரை.காமராஜ் தலைமையில் கொண்டாடினர்.
இதில் மாவட்ட துணை செயலாளர் கண்ணுசாமி, சுடர்செல்வம், சிவகுமார், ஒன்றிய செயலாளர் வாசுராவி, கேப்டன் மன்ற செயலாளர் தவசிஅன்பழகன், வேப்பூர் ஒன்றிய செயலாளர் மலர்மன்னன், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் சஞ்சீவி தொழிற்சங்க நிர்வாகிகள் சுரேஷ் மாவட்ட தொண்டரணி துணை செயலாளர் புனிதராஜ், குரும்பலூர் பேரூர் செயலாளர் ரமேஷ், பெரம்பலூர் நகர செயலாளர் ஜெயகுமார், குரும்பலூர் நிர்வாகிகள் முத்துசாமி, ராமச்சந்திரன், புகழேந்தி, சுரேஷ், காளிமுத்து, ஒன்றிய நிர்வாகி ,கலைச்செல்வன், சதீஷ், கோவிந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்