பெரம்பலூர்: முன்னாள் முதல்வர் எம் ஜி ஆர் 27 வது நினைவு தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட தேமுதிக சார்பாக குரும்பலூரில் உள்ள எம்.ஜி.ஆரின் உருவச் சிலைக்கு மாவட்ட செயலாளர்.துரை.காமராஜ் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மாவட்ட துணை செயலாளர் ஆர்.கண்ணுசாமி, சுடர்செல்வம், சிவகுமார், ஒன்றிய செயலாளர் வாசு.ராவி, கேப்டன் மன்ற செயலாளர் தவசி.அன்பழகன், வேப்பூர் ஒன்றிய செயலாளர் மலர்மன்னன், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் சஞ்சீவி தொழிற்சங்க நிர்வாகிகள், சுரேஷ் மாவட்ட தொண்டரணி துணை செயலாளர் புனிதராஜ்,
குரும்பலூர் பேரூர் செயலாளர் ரமேஷ், பெரம்பலூர் நகர செயலாளர் ஜெயகுமார் , குரும்பலூர் நிர்வாகிகள் முத்துசாமி,ராமச்சந்திரன், புகழேந்தி, சுரேஷ், காளிமுத்து, ஒன்றிய நிர்வாகி ,கலைச்செல்வன், சதீஷ், கோவிந்தன் ஆகியோர் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.