பெரம்பலூர் : தேமுதிக தலைவர் விஜயகாந்த் வரும் ஆகஸ்ட் 25ம் தேதி பிறந்த நாளை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளர் துரை.காமராஜ் தலைமையில், ஆலத்தூர் ஒன்றிய செயலாளர் பொன்.சாமிதுரை முன்னிலையில் ஒன்றியத்தில் பாடாலூர், இரூர், நாட்டார்மங்கலம், செட்டிகுளம், போன்ற பல கிராமங்களில் கட்சிக் கொடி ஏற்றி நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து செட்டிக்குளம் பாலதண்டபானி முருகன் கோவிலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பெயரில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வெள்ளிரதம் தேர் இழுக்கபட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் வாசுரவி, துரை.சிவாஐயப்பன், மாவட்ட பொருளாளர் சீனி.வெங்கடேசன், மாவட்ட துணை செயலாளர் ஆர்.கண்ணுசாமி,, செயற்குழு உறுப்பினர் ரெங்கராஜ், பொதுகுழு உறுப்பினர் ரவிக்குமார், கேப்டன் மன்ற செயலாளர் தவசிஅன்பழகன், மாவட்ட மற்றும் கழக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கிளைகழக நிர்வாகிகள் முத்துவேல்,பச்சமுத்து,சுரேஷ் ஆகியோர் செய்து இருந்தனர்.