பெரம்பலூர் சட்ட மன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிடும் கி.ராஜேந்திரன் தேமுதிக, மக்கள் நலக் கூட்டணி, தா.ம.க. கட்சியினருடன் இன்று காலை வாலிகண்டபுரத்தில் வாக்கு சேகரிப்பை துவங்கினார்.
கடந்த 50 ஆண்டுகால ஆடசியில் திராவிடக் கட்சிகள் தமிழ்நாட்டை சீரழித்து விட்டன. இலவசங்களை கொடுத்து மக்களின் வாழ்க்கைத்தரம் குறைந்து விட்டது.
இன்று மக்கள் கல்வி, மருத்துவம், உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் இன்றி தவித்து வருகின்றனர்.
ஒரு முறை மக்கள் நலக் கூட்டணி, தேமுதிக, தாமக கூட்டணிக்கு ஒரு வாய்ப்பு அளித்து தன்னை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டுமென வி.ஆர்.எஸ். புரம் ஏரியில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திடத்தில் ஏரியில் பணிபுரிந்த கிராம மக்களிடம் பல்வேறு வாக்குறுதிகளை அளித்தர், பின்னர், தன்னை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
முன்னதாக வல்லாபுரம், பிரம்மதேசம், கிராமங்களிலும், பின்னர், குடிக்காடு, அனுக்கூர், சிறுவயலூர், அழகாபுரி, மேட்டுப்பாளையம். சாத்தனவாடி, புதூர், நெய்க்குப்பை, தழுதாழை, வெங்கலம், கிருஷ்ணாபுரம், வெங்கனூர் பகுதிகளில் திவிர வாக்கு சேகரிப்பை மேற்கொண்டுள்ளார்.
அப்போது தேமுதிக மாநில செயற்குழு உறுப்பினர் செல்லப்பிள்ளை, விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர் கிருஷ்ணகுமார், மாநில தொணடரணி செயலாளர் கராத்தே பெரியசாமி, இளம் சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்டட துணை அமைப்பாளர் எஸ்.பி. பாலு, ஒன்றிய தொண்டரணி துணை அமைப்பாளர் க.ராஜேந்திரன், பாராளுமன்ற தொகுதி துணை அமைப்பாளர் மன்னர்மன்னன், மதிமுக கட்சியின் மாவட்ட பொருளாளர் ஜெயசீலன் மற்றும் தேமுதிக மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் துரை.சிவா.ஐயப்பன் உள்பட கூட்டணி கட்சியினர் பலர் உடன் இருந்தனர்.