பெரம்பலூர் சட்ட மன்ற தொகுதி தேமுதிக, மக்கள் நல கூட்டணி, தா.ம.க கூட்டணியின் வேட்பாளர் கி.ராஜேந்திரன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
பெரம்பலூர்: பெரம்பலூர் சட்ட மன்ற தொகுதியின் தேமுதிக, மக்கள் நல கூட்டணி, தா.ம.க கூட்டணியின் வேட்பாளர் கி.ராஜேந்திரன் இன்று கூட்டணி கட்சியினருடன் வந்து வேட்பு பெரம்பலூர் கோட்டாசியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
அப்போது, மதிமுக மாநில பொறுப்பாளரும், ரோவர் கல்வி நிறுவனங்களின் தலைவர் வரதராஜன், தா.மா.க. எம்.என் ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் என். செல்லதுரை, வி.சி.க, மாவட்ட செயலாளர் தமிழ்மாணிக்கம், மற்றும் தேமுதிக கட்சியின் மாவட்ட செயலாளர் துரை.காமராஜ், மதிமுக மாவட்ட செயலாளர் துரைராஜ், மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட துணை செயலாளர் ந. கிருஷ்ணகுமார் ஒன்றிய செயலாளர்கள் கூட்டணி கட்சி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் வேட்பாளர் கி.ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது :
பெரம்பலூர் மாவட்டத்தில் விவசாயிகள் பெரும் அளவில் பாதிக்கப்படுகின்றனர். விவசாயம் சார்ந்த தொழில்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து விவசாயிகளை முன்னேற்ற செயல்படுவொம். பாசன வசதி கிடைக்கப் பாடுபடுவோம், மகளிர் சுய உதவிகள் மூலம் தொழில் வளர்ச்சி கொண்டு வர பாடுபடுவேன். அடிப்படை, கட்டுமான வசதிகளை ஏற்படுத்தி தருவேன் என தெரிவித்தார்.