பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையில் இன்று அதிமுக, திமுக, தேமுதிகவினர் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர். நீயா, நானா என கட்சி வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தேமுதிக வும் தங்களது பங்கிற்கு வாக்கு சேகரித்து வருகின்றனர். பெரம்பலூர் சட்ட மன்ற தொகுதி தேமுதிக வேட்பாளர் கி.ராஜேந்திரன் தனது கட்சியினருடன் அரும்பாவூரில் பிரச்சாரத்தை துவக்கிய அவர் அன்னமங்கலம், விசுவகுடி பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
கிராமங்கள் தோறும் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களிடம் சென்றும் வாக்கு சேகரித்து வருகிறார்.