பெரம்பலூர் சட்ட மன்ற தொகுதியில் தேமுதிக மக்கள் நலக் கூட்டணி சார்பில் தேமுதிக வேட்பாளராக கி.ராஜேந்திரன் போட்டியிடுகிறார்.
இன்று காலை தம்பை கிராமத்தில், கட்சிபிரதிநிதிகளுடன் துவங்கிய அவர் ஊழலற்ற ஆட்சி அமைக்கவும், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் அமைக்கவும், தேமுதிகவை ஆதரித்து அதிக அளவில் தன்னை வெற்றி பெற செய்ய வேண்டுமன வாக்காளர்களிடம் கோரினார்.
பின்னர், தேவையூர், ரஞ்சன்குடி, மங்களமேடு, மங்களம், எறையூர், பேரையூர், தைக்கால், மரவனத்தம், வள்ளியூர், வி.களத்தூர், அகரம், திருவாளந்துறை, பசும்பலூர், பாண்டகப்பாடி, பிம்பலூர், ஆகிய கிராமங்களில் தீவிர பகுதிகளில் வாக்கு சேகரிப்பில்ஈடுபட்டார்.
தேமுதிக பொருளாளார் சீனி. வெங்கடேசன், மாநில பொதுக்குழு உறுப்பினர் செல்லப்பிள்ளை, தேமுதிக ஒன்றிய செயலாளர் சிவா.ஐயப்பன், மற்றும் விசிக மாவட்ட துணைச் செயலாளர் ந.கிருஷ்ணகுமார், வேப்பந்தட்டை ஒன்றிய செயலாளர் இனியன், ஒன்றிய துணை அமைப்பாளர் க.ராஜேந்திரன், மற்றும் சக்திபாலா, மாவட்ட மாணவரணி பொறுப்பாளர் முத்தமிழ்ச்செல்வன், மதிமுக பெரம்பலூர் மாவட்ட பொருளாளர் ஜெயசீலன் மற்றும் கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.