பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் வரும் நவ.17. அன்று “மக்களுக்காக மக்கள் பணி” திட்டம் தொடர்பாக தேமுதிக கட்சி நிறுவனர் விஜயகாந்த் மற்றும் பிரேமலதா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு “இணையதள முகவர்களுக்கு” கணினி உபகரணம் நல உதவிகள் வழங்குதல், மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
இதனை மன்னிட்டு இன்று வேப்பூரில் நடைபெறும் மக்களுக்காக மக்கள் பணி விழா அழைப்பிதழை வேப்பூர் ஒன்றியம் குன்னம் அந்தூர் வரகூர் ,கல்லம்புதூர் பரவாய் வேப்பூர் நன்னை, வடக்கலூர் லப்பைககுடிகாடு திருமாந்துறை, டி.கீரனூர், கீழக்குடிகாடு ஆகிய கிராமங்களில் அழைப்பிதழ்களை அக்கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் துரை.காமராஜ் தலைமையில் அனைத்து கிராமங்களிலும் கட்சி நிர்வாகிகள் பொதுமக்களை நேரில் சென்று அழைப்பிதழ் கொடுத்து நிகழச்சிக்கு வருகை தருமாறு பொதுமக்களை கேட்டுக் கொணடனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்டஅவைத் தலைவர் கணபதி, மாவட்ட பொருளாளர் சீனி.வெங்கடேசன், மாவட்ட துணை செயலாளர் ஆர்.கண்ணுசாமி, வேப்பூர் ஒன்றிய செயலாளர் சி.மலர்மன்னன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் வைரமணி ராஜேந்திரன், தொழிற்சங்க செயலாளர் சேகர் மற்றும் மாவட்ட,ஒன்றிய, நகர, பேரூர் ,கிளை கழக, மகளிரணி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.