சட்ட மன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தல் விதிமுறை மீறல்கள் தீவரமாக கண்கானிக்கப்பட்டு வருகின்றன. மேலும் பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் விதிமுறைமீறல்கள் நடப்பது குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்க இலவச கட்டணமில்லா தொலைபேசி சேவையை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
பொதுமக்கள் பலரும் 18004257031 என்ற கட்டணமில்லா எண்ணில் தொடர்பு கொண்டு தங்கள் புகார்களை தெரிவித்து வருகின்றனர். கட்டுப்பாட்டு அறைக்கு இதுவரை 113 புகார்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அனைத்து புகார்களின் மீதும் உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டணமில்லா தொலைபேசியை பொதுமக்களிடையே மேலும் பிரபலப்படுத்த் உள்ளூர் கேபிள் தொலைக் காட்சிகளில் விளரம்பரம் செய்யப்படுகின்றது.
பெரம்பலூர் நகரப் பகுதிகளில் பயணிக்கும் பேருந்துகள், மினி பேருந்துகள், ஷேர் ஆட்டோக்களில் இந்த எண்கள் பொதுமக்களை கவரும் வகையில் பெரிய அளவில் ஸ்டிக்கர்களாக ஒட்டப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா தொலைபேசி எண்கள் பிளக்ஸ் பேனர்களில் அச்சிடப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.
கண்ணியமான, நேர்மையான தேர்தல் நடைபெற பொதுமக்களின் பங்கும் இன்றியமையாததாகும். எனவே, பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் ஏதேனனும் தேர்தல் விதிமீறல் நடப்பதை அறிந்தால் உடனடியாக 18004257031 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் தொடர்புகொண்டு புகார்களை தெரிவிக்கலாம்.