பெரம்பலூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான நந்தகுமார் விடுத்துள்ள தகவல்
நடைபெறவுள்ள சட்டமன்றப்பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்களை கண்காணிப்பதற்காக இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தால் பெரம்பலூர் மாவட்டத்திற்கு தேர்தல் செலவினப் பார்வையாளராக ராஜேஷ் கவுலி நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், சட்ட மன்றத் தேர்தலை சிறப்பாகவும், நேர்மையாகவும் நடத்த மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய சிறப்பு பார்வையாளர்களாக பிரசன்ஜித்சிங் மற்றும் சஞ்சிவ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மூன்று பார்வையாளர்களும் பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தல் தொடர்பாக நடைபெற்று வரும் பணிகள் குறித்து நாளை (22.4.2016) காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் நடைபெறும் ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.
இக்கூட்டத்தில் தேர்தல் செலவினங்கள் குறித்து பின்பற்றவேண்டிய நடைமுறைகள் பற்றியும், சட்ட மன்றத் தேர்தல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றியும் ஆலோசிக்கப்படவுள்ளது, என தெரிவித்துள்ளார்.