நடைபெறவுள்ள சட்ட மன்றப் பொதுத் தேர்தலில் பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்ட மன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் பொதுப் பார்வையாளர், காவல் பார்வையாளர் மற்றும் தேர்தல் செலவினப் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தல் விதிமீறல்கள் ஏதேனும் நடைபெறுவது குறித்து தகவல் அறிந்தால் பொதுமக்கள் உடனடியாக இந்த தேர்தல் பார்வையாளர்களிடம் தகவல் தெரிவிக்கலாம்.
எனவே, தேர்தல் விதிமீறல் குறித்து புகார் தெரிவிக்க விரும்பும் நபர்கள் தேர்தல் பொதுப் பார்வையாளர் வி.என்.விஷ்ணு 8903024617 என்ற அலைபேசி எண்ணிலும்,
தேர்தல் செலவினப் பார்வையாளர் ராஜேஸ் கௌலி 8903024608 என்ற எண்ணிலும், காவல் பார்வையாளர் லிரேமோ டோபி 89030244618 என்ற எண்ணிலும் தொடர;பு கொண்டு பொதுமக்கள் புகார்களை தெரிவிக்கலாம்.
கண்ணியமான, நேர்மையான தேர்தலை நடத்த பொதுமக்கள் தங்கள் ஒத்துழைப்பினை வழங்க வேண்டும், என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.