பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம் அரும்பாவூர் அருகே உள்ள மேட்டூர் கிராமத்தில் மாரியம்மன் மற்றும் மூப்பனார் கோவில்களுக்கு தேர் திருவிழா நடைபெற உள்ளதாகவும், அந்த திருவிழாவில் வரும் தேரை இழுத்து வருவதற்கும், சாமிகளுக்கு படைப்பதற்கும் தலித்துகளுக்கு அனுதியளிக்க வேண்டும் என்றும், அதற்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு கொடுக்கபட்ட மனுவில் கோரியுள்ளனர். சுமார் 50க்கும் மேற்பட்டோர் மனு கொடுக்க திரளாக வந்திருந்தனர்.