தமிழக அரசு மீது தேவையில்லாமல் குற்றஞ்சாட்டுவது, மத்தியில் இருப்பவர்களுக்கு வழக்கமாகிவிட்டதாகவும், தங்கள் தரப்பு கிளர்ந்து எழுந்தால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்றும் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.சென்னை மெரீனா கடற்கரையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தபின், செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், தமிழக அரசு மீது குற்றஞ்சாட்டுவதை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். அரசியல் உள்நோக்கத்துடன் குற்றச்சாட்டுகளை கூறினால், பதிலடி கொடுக்க தாங்களும் இருப்பதாக அவர் எச்சரிக்கை விடுத்தார்.