group1exam
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடைபெற்ற தொகுதி-1 க்கான தேர்வினை மாவட்ட ஆட்சியர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் இன்று தொகுதி-1 க்கான முதனிலைத் தேர்விற்காக தனலெட்சுமி சீனிவாசன் மகளிர் கலைக் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு கூடங்களை மாவட்ட ஆட்சியர் டாக்டர் தரேஸ்அஹமது பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் 4 மையங்கள் தெரிவுச் செய்யப்பட்டு, மொத்தம் 2 ஆயிரத்து 571 நபர்கள் தேர்வு எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததில், இன்று நடைபெற்ற தேர்வில் ஆயிரத்து 420 நபர்கள் பங்றேறனர். இது 55 சதவீத வருகை பதிவாகும். இத்தேர்வுக்கு 9 முதன்மை கண்காணிப்பாளர், 3 பறக்கும் படை, 3 நடமாடும் குழு மற்றும் 9 அறை ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் நியாமிக்கப்பட்டு, தேர்வினை கண்கானித்தனர். தேர்வு நடைபெறும் அனைத்து மையங்களுக்கும் சிறப்பு பேருந்து வசதி மற்றும் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டிருந்தது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!