பெரம்பலூர்: சில நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் ஜெயலலிதாவால் துவக்கி வைக்கப்பட்ட, ‘1100’ அம்மா அழைப்பு மையத்தை, பொதுமக்கள் தொடர்பு கொண்டால், பிஸியாக இருப்பதாகவும், தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதாகவும் இந்தி, இங்கிலீஸ், தமிழில் வரும் தகவலால் பொதுமக்கள் நொந்து போயுள்ளனர்.
பொதுமக்கள் தங்களுடைய குறைகளை, 1100 என்ற இலவச தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு தெரிவித்தால், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கும், அம்மா அழைப்பு மையம், சென்னையில் சில நாட்களுக்கு முன் துவங்கப்பட்டது.
‘நேரில் மனு கொடுக்கும்போதே, நடவடிக்கை என்பது வெகு சிரமமாக இருக்கும், 138 பணியாளர்களுடன், 24 மணி நேரமும் செயல்படும். தினசரி, 15 ஆயிரம் அழைப்புகள் வரை எடுத்துக்கொள்ளப்படும் போன்ற தகவல்களை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொதுமக்கள் இருந்தும் குறைகளை தெரிவிக்க, 1100ஐ தொடர்பு கொண்டால், இந்தி, தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில், ரொம்ப பிஸி, தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளது என்பது தான் மாறி மாறி வருகிறது. இதனால், குறைகளை தெரிவிக்க விரும்பிய மக்கள் வெறுத்து போய்விட்டனர்.
செல்போன் மூலம் தொடர்பு கொண்ட பலரும், அம்மா அழைப்பு மையம், ஓரிரு நாளிலேயே செயலற்ற நிலையில் போய்விட்டது என குற்றம் சாட்டினர்.
‘அம்மா அழைப்பு மையம் துவங்கப்பட்டதும், அனைத்து அதிகாரிகளையும் அழைத்து அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் கூட்டம் நடத்தினார்கள். அதில், வரும் தகவல்களை, எவ்வாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கொண்டு சேர்ப்பது, நடவடிக்கை எடுப்பது போன்ற விபரங்கள் குறித்து விளக்கமும் அளிக்கப்பட்டது.
திட்டம் துவங்கி இரண்டு நாட்கள் கூட செயல்படவில்லை என்பதுடன் அவுட் ஆப் சர்வீசில் இருக்கும் அம்மா அழைப்பு மையம் 1100-யை ஆன் செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.